2021 மே 15, சனிக்கிழமை

எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் வர்த்தக நிலையங்கள் அமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)
நத்தார் மற்றும் புதுவருட பண்டிகையினை முன்னிட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்காக வரும் தென்பகுதி வியாபாரிகளுக்கு மன்னார் பொது விளையாட்டரங்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் வர்த்தக நிலையங்கள் அமைப்பதற்கான இடங்கள் ஒதுக்கப்படவுள்ளதாக மன்னார் நகர சபையின் உறுப்பினர் எஸ்.இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.

கடந்த வருடம் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகள் மன்னார் நகரசபை பிரதான வீதியான எஸ்பிலேனட் வீதியில் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் இவ்வருட விற்பனை நடவடிக்கை எவையும் குறித்த வீதியில் நடாத்துவதற்கு எக்காரணம் கொண்டும் மன்னார் நகர சபையினால் அனுமதிக்கப்படமாட்டதென நகர சபை உறுப்பினர் தெரிவித்தார்.

மேலும் குறித்த கடைகளுக்காண  அனுமதிப்பத்திரம் மன்னார் நகர சபையில் விநியோகிக்கப்படுவதாகவும், விண்ணப்பிக்கும் வியாகாரிகள் 15 *15 சதுர அடி கடைக்கு 12 ஆயிரம் ரூபாவினை கட்டணமாக செலுத்த வேண்டும் என நகர சபை உறுப்பினர் தெரிவித்தார்.

இவ்வருட பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தென் பகுதி வியாபாரிகள் அதிகளவில் மன்னாருக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு சகல வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் உறுப்பினர் எஸ்.இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .