2020 ஒக்டோபர் 02, வெள்ளிக்கிழமை

15ஆவது வருடமாக இராஜேஸ்வரன் தலைவராக தெரிவு

Super User   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவராக எஸ்.ரி.கே. இராஜேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

15ஆவது வருடமாக வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க தலைவராக இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் 15ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை வவுனியா அருந்ததி ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் பதவிகளுக்கான தேர்வு இடம்பெற்றது. இதன்போது செயலாளராக கே.சிவஞானமும் பொருளாளராக ஏ.ரசீமும் உப தலைவராக எம்.விஜயரட்ணமும் உப செயலாளராக பி.காமராஜாவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்த நிகழ்வில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனிஸ்வரன், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், அ.தியாகராஜா மற்றும் ஐ.இந்திரராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .