2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் போராளிகள் 158 பேர் வவுனியாவில் இன்று விடுதலை

Super User   / 2010 நவம்பர் 05 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(ரி.விவேகராசா)

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 158 பேர் இன்று காலை விடுவிக்கப்பட்டனர்.

முன்னாள் போராளிகளை விடுவிக்கும் நிகழ்வு பம்பைமடு, பூந்தோட்டம், நெளுக்குளம் ஆகிய இடங்களில் உள்ள புனர்வாழ்வு நிலையங்களில்  இடம்பெற்றது.

குறித்த இடங்களில்  உள்ள புனர்வாழ்வு நிலையங்களுக்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பு படையினர் முன்னாள் போராளிகளை பெற்றோர்  பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.

இன்று விடுதலை செய்யப்பட்டவர்கள் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது  பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தவர்களாவர்.

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .