2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

சிலாபத்தை சேர்ந்த 16 மீனவர்கள் விடுதலை

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 24 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

இந்திய கடல் எல்லையை அண்மித்ததாகக் கூறி, கைதுசெய்யப்பட்ட சிலாபத்தை சேர்ந்த 16 மீனவர்களையும்; மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.ஷிராணி விடுவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மேற்படி 16 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டபோதே, விடுவிக்கப்பட்டனர்.

இந்திய கடல் எல்லையை அண்மித்ததாகக் கூறி, சிலாபத்தை சேர்ந்த மேற்படி 16 மீனவர்களும் கடந்த 15 நாள்களுக்கு முன்னர் இந்திய கடலோரக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட 16 மீனவர்களும் இந்திய கடலோர கடற்படையினரால் மன்னார் தாழ்வுப்பாடு கடலோர கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் மேற்படி 16 மீனவர்களும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .