2025 ஜூலை 03, வியாழக்கிழமை

'மேத்தா நிறுவனம்' மூலமாக அங்கவீனமான 1,738 பேர் பயனடைந்தனர்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 06 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெனி


யுத்தம் முடிவடைந்த பின்னர் 2009ஆம் ஆண்டு ஜுலை மாதத்திலிருந்து கடந்த வருடம் (30.12.2012) வரை இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் அங்கவீனமான 1,738 பேருக்கு 'மேத்தா நிறுவனம்' இலவசமாக தனது  சேவையை வழங்கியுள்ளதாக மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் மேத்தா நிறுவன தொடர்பு அதிகாரி சின்கிலேயர் பீற்றர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமையவும் சுகாதார அமைச்சின் அழைப்பின் பேரிலும்  'மேத்தா நிறுவனம்' மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 2009ஆம் ஆண்டு ஜுலை மாதம் 10ஆம் திகதி தனது மனிதநேய பணியை முதலில் ஆரம்பித்தது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'706 பேர் மன்னார் வைத்தியசாலையில் அமைந்துள்ள நிலையத்திலும் 1,032 பேர் மேத்தா நிறுவனத்தின் நடமாடும் சேவை மூலமும்  பயனடைந்துள்ளனர்.

எமது பயனாளிகளில் 80 பேர் யுத்தத்தினால்  பாதிக்கப்பட்டவர்களாவர்.  விபத்தினால் 12 பேரும்  நீரிழிவு நோயால் அவயவங்களை இழந்த 5 பேரும்   பிறப்பினால் ஊனமுற்ற 3 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

கடந்த 3 வருடங்களில் சுமார் 35 நடமாடும் சேவைகள்  நடத்தப்பட்டன. வவுனியா, கிளிநொச்சி , முல்லைத்தீவு, பூநகரி, வெள்ளாங்குளம், இலுப்பைக்கடவைப் பாடசாலை, கண்டி, மாத்தறை  ஆகிய இடங்களில் 2 மாதங்களுக்கு ஒரு தடவை இச்சேவைகள் நடத்தப்பட்டன.

மன்னார் மாவட்டத்திற்கு வெளியில் நடைபெறும் சேவை மூலம் அதிகளவான பெண்களும் சிறுவர்களும் பயன் பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .