2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மடுத் திருவிழாவை முன்னிட்டு விசேட பஸ் சேவை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சங்கவி)

நாளை நடைபெறவிருக்கும் ஆவணி மாத மடுத் திருவிழாவை முன்னிட்டு யாழ். குடாநாட்டிலிருந்து பக்தர்கள் செல்வதற்காக விசேட பஸ் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான வடபிராந்திய அலுவலகம் இந்த இந்த விசேட பஸ் சேவையை ஒழுங்கு செய்துள்ளது.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை மற்றும் காரைநகர் ஆகிய பகுதிகளிலிருந்து மடுமாத ஆலயத்திற்கான விசேட பஸ் சேவை நாளை இடம்பெறவிருப்பதாகவும், யாழ்ப்பாணத்திலிருந்து நாளை காலை 6.30, 7, 7.30, 8.30 ஆகிய நேரங்களிலும் காரைநகரிலிருந்து நாளை காலை 5 மணிக்கும் பருத்தித்துறையிலிருந்து நாளை காலை 9 மணிக்கும் இந்த விசேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--