Super User / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 281 குடும்பங்கள் நாளை மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளன.
இதற்கான அனுமதியை கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு வழங்கியுள்ளார் என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தமிழ்மிரர் இணையத் தளத்துக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சாந்தபுரம் கிராமத்தில் வெடிபொருள் அபாய நிலைமை காணப்பட்டமையால் அப்பகுதி மக்கள் மீள்குடியேற அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை அப்பகுதியைச் சேர்ந்த குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் இருந்து அழைத்துவரப்பட்டு சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் கடந்த 4 மாதங்களாக தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் தம்மைச் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு ஜனாதிபதி உட்பட பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் சாந்தபுரம் கிராமத்தில் தற்போது வெடிபொருள்கள் அகற்றப்பட்ட நிலையில் மக்கள் வசிப்பதற்கேற்ற பிரதேசமாக படையினரால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.
இதேவேளை – மீள்குடியேற்றத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து இக்கிராம மக்கள் படையினரின் அனுமதியுடன் தமது காணிகளை பார்வையிட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .