2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

விழுபளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் விக்கிரகங்கள் திருட்டு

Super User   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

எழுதுமட்டுவாள், விழுபளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் இருந்த விக்கிரகங்கள் அனைத்தும் காணாமல் போயுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்படாத எழுதுமட்டுவாள், விழுபளை பிரதேசத்தில் குறித்த ஆலயத்துக்கு பூசகர்கள் சென்று பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் பிரதி திங்கட்கிழமை தோறும் இங்கு பூசைகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பூசகர் ஆலயத்துக்குச் சென்ற சமயம் ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் விக்கிரகங்கள் காணாமல் போயிருந்தன.

இதனை பார்த்து அதிர்ச்சியுற்ற பூசகர், கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கருங்கல்லாலான விக்கிரகங்களும் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--