2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்கான கருத்தரங்கு ஆரம்பம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 20 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வட மாகாணத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசாங்க கட்டிட ஒப்பந்தகாரர்களுக்கான இரு நாள் கருத்தரங்கு இன்று திங்கட்கிழமை வவுனியா நெல்லி ஸ்ரார் ஹோட்டலில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது.

வடமாகாண சபையும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் இணைந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளனர். வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பிரதிநிதி றிச்சாட் வோக்கர், மாவட்ட அரச அதிபர் திருமதி.சாள்ஸ் மற்றும் உலகவங்கி, ஜேய்கா நிறுவனத்தின் பிரதிநிதிகளும் மற்றும் முக்கிஸ்த்தர்கள் பலரும்  நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வானது, கட்டிட ஒப்பந்தகாரர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 150 ஒப்பந்தகாரர்கள் இதில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--