2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

மீள் குடியேற்ற அமைச்சர் தலைமையில் மன்னாரில் உயர்மட்ட கூட்டம்

Super User   / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                                                                (எஸ்.ஜெனி)

மன்னாருக்கான விஜயத்தினை இன்று மேற்கொண்டிருந்த மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, மன்னார் மாவட்ட செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் இடம்பெற்ற உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இதன்போது, மீள்குடியேற்றம் தொடர்பாகவும் அம்மக்களின் தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, மன்னார் முருகன் பகுதியில் தங்களின் பழைய இருப்பிடங்களில் குடியேறியுள்ள 25 சிங்கள குடும்பங்கள் தொடர்பாகவும், இவர்களின் இருப்பிடங்கள் தொடர்பாகவும், இக்குடும்பங்கள் குறித்த பகுதியில் மீளக்குடியமர்த்துவது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ, மன்னார் அரச அதிபர் ஏ.நிக்லஸ்பிள்ளை உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--