Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மடு பிரதேசத்தில் கடுமையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக அங்கு குடிநீருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திருவிழா இம்முறை இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட் தந்தை டெஸ்மன் குலாஸ் தமிழ் மிரருக்கு தெரிவிக்கையில், ஒக்டோபர் மாதத்தில் மடுத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் இவ்வருடம் குறித்த காலப்பகுதியில் கிடைக்க வேண்டிய மழை பெய்யவில்லை.
இதனால் பக்தர்களின் தேவைக்கான குடி நீருக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அவர் தெரிவித்தார். இதேவேளை, மன்னாரில் காலம் கடந்த நிலையில் பருவ மழை பெய்து வருகின்றது.
மடு திருத்தலத்தில் ஏற்கனவே நீருக்கு பாரிய டட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு கடும் வரட்சி ஏற்பட்டிருந்தமையினாலேயே ஒக்டோபர் மாதத் திருவிழா இடம்பெறாது என அறிவித்துள்ளோம்.
எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள திருவிழாவுக்கான நீர் வசதி இதுவரை ஏற்படுத்தப்படவில்லை என்றும் திருவிழா தினத்தில் திருப்பழி ஒப்புகொடுக்கப்படும் என்றும் டெஸ்மன் குலாஸ் அடிகளார் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago