2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

கணவனை இழந்த பெண்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்

Super User   / 2010 ஒக்டோபர் 09 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

கடந்த கால யுத்தத்தின் போது கணவனை இழந்த மற்றும் கணவரால் கைவிடப்பட்டு மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் வாழ்ந்து வரும் பெண்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கப்பட்டு வருவதாக மன்னார் சக வாழ்வு மன்றத்தின் மாவட்ட இணைப்பாளர் எப்.எம். டியூட்டர் தெரிவித்தார்.

மன்னார் சகவாழ்வு மன்றத்தின் ஏற்பாட்டில் குடும்பத்தை தலைமைத் தாங்கி வரும் பெண்களுக்கு வீட்டுத் தோட்டம், கோழி வளர்ப்பு, தையல் போன்ற வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காக 30 ஆயிரம் ரூபா முதல் 35 ஆயிரம் ரூபா வரையிலான வாழ்வாதார பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுட்குட்பட்ட கிராமங்களில், கிராம அலுவலர்களினாரல் தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்த 180 பெண்களுக்கு மேற்படி வாழ்வாதார உதவித் திட்டம் நேற்று முன்தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


 


  Comments - 0

 • rakhu Sunday, 10 October 2010 02:10 PM

  குட் நியூஸ் .

  Reply : 0       0

  Ajith Soysa Thursday, 14 October 2010 04:21 AM

  I really please to see this pictures on this mail. I would be great help for those ignorent societies. Try to continue this initiative in future as well.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .