2021 மார்ச் 01, திங்கட்கிழமை

பணத்தைப் பறித்த சாரதியை பொலிஸார் மடக்கினர்

Super User   / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

கிளிநொச்சியில் கட்டட ஒப்பந்தகாரர் ஒருவரைத் தாக்கிவிட்டு, அவரிடமிருந்த பணத்தை பலவந்தமாகப்பறித்துக்கொண்டு சென்ற சாரதி ஒருவரை மாங்குளம் பொலிஸார் நேற்று மடக்கிப்பிடித்தனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது:

கிளிநொச்சிப் பகுதியில் இயங்கி வரும் கட்டட ஒப்பந்த நிறுவனம் ஒன்றுக்கு கொழும்பிலிருந்து லொறி ஒன்றில் ஓடுகளை ஏற்றிக்கொண்டு பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த சாரதி ஒருவர் வந்தார். கொண்டு வந்த ஓடுகளை உரிய இடத்தில் இறக்கி விட்டு, மீளவும் கொழும்பு திரும்பும் சமயத்தில் கட்டட ஒப்பந்தகாரர் அவ்விடத்துக்கு வந்துள்ளார்.

ஒப்பந்தகாரரிடம் பெருந்தொகைப் பணம் இருப்பதைக் கண்ணுற்ற சாரதி அவரைத் தாக்கி விட்டு  பணத்தை எடுத்துக் கொண்டு  தப்பியோடிவிட்டார்.

இது குறித்து உடனடியாகவே அந்த ஒப்பந்தகாரர், கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அவரின் முறைப்பாட்டின் பேரில் விரைந்து செயற்பட்ட கிளிநொச்சிப் பொலிஸார், இது குறித்து மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கினர்.

இதனையடுத்து  மாங்குளம் பகுதியை குறித்த சாரதி அண்மித்தவேளை அவரை மாங்குளம் பொலிஸார் கைது செய்து கிளிநொச்சிப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். சாரதியை விசாரணை செய்த பொலிஸார் அவரிடமிருந்த பணத்தைப்  பறிமுதல் செய்து, ஒப்பந்தகாரரிடம் வழங்கினர். பின்னர் எச்சரிக்கையின் பின்பு குறித்த சாரதி விடுவிக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .