2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

இயக்கச்சியில் மர்மப்பொருள் வெடிப்பு: ஒருவர் படுகாயம்

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt(கண்ணன்)

பளை, இயக்கச்சிப் பகுதியில் மீள்குடியேற்றம் இம்பெற்றுள்ள பகுதியில் இன்று மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் மீள்குடியேறியுள்ள நிலையில் தமது காணியைத் துப்புரவுசெய்து குப்பையைக் கொழுத்திக்கொண்டிருந்த சமயம் இந்த மர்மப்பொருள் வெடித்துள்ளது.

இன்று முற்பகல் 11மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இதே இடத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரன் துளசிகரன் (வயது – 17) என்பவரே படுகாயமடைந்தவராவார்.

இவர் உடனடியாகச் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .