Super User / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கண்ணன்)
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு புதிய மேலதிக அரச அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபராக தென்மராட்சிப் பிரதேச செயலர் செ.ஸ்ரீநிவாசனும், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபராக கோப்பாய் பிரதேச செயலர் சீ.ஏ.மோகன்ராசும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தென்மராட்சிப் பிரதேச செயலருக்கான பிரிவுபசார நிகழ்வு இன்று பிரதேசசெயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தால் நடத்தப்பட்டது.
உதவிப் பிரதேச செயலர் செல்வி ந. ரஞ்சனா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலகக் கணக்காளர் கில்பேட் குணம், நிர்வாக அலுவலர் ஏ.தேவராஜா, தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் எஸ். பாஸ்கரன், தலைமைப்பீட கிராம அலுவலர் ஏ. குமாரசாமி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி இ.ரகுநாதன் உட்படப் பலர் உரையாற்றினர்.
9 minute ago
18 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
18 minute ago
37 minute ago