2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் தொழில் அமைச்சின் நடமாடும் சேவை

Super User   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

தொழில் அமைச்சின் நடமாடும் சேவை எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியா சைவபிரகாச வித்தியாலயத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அமைச்சர் காமினி லொக்குகே தலைமையில் நடைபெறவுள்ளது என வவுனியா மாவட்ட தொழில் திணைக்கள உதவி ஆணையாளர் என் நகுலேஸ்வரன்பிள்ளை தெரிவித்தார்.

தொழில் திணைக்களத்துடன் தொடர்புடைய பல்வேறு  பிரச்சினைகளுக்கு இந்நடமாடும் சேவையில்தீர்வு பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் வேலையற்றவர்களுக்கு தொழில் வழிகாட்டி கருத்தரங்கும் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் பெண்களுக்கு சுயதொழில் மூலம் வருமானத்தை பெறக்கூடிய விழிப்புணர்வு கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உதவி ஆணையாளர் குறிப்பிட்டார்.
 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .