2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் 'இளைஞர்களுக்கான நாளை' கல்வித்திட்டம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

கா.பொ.த சாதரண தரப்பரீட்சையில் தோற்றவுள்ள மன்னார் கல்வி வலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னோடிப் பரீட்சைக்கான ஆயத்த வகுப்புக்கள் இன்று ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவின் புதல்வரும் அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஐபக்ஷ தலைமையில் நடைபெற்றது.


'இளைஞர்களுக்கான நாளை'எனும் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் 1700 மாணவர்களுக்கு மேற்படி ஆயத்த வகுப்புக்கள் நடத்தப்பட்டடு வருகின்றது. 22ஆம் 23ஆம் திகதிகளில் தெரிவுசெய்யப்பட்ட மன்-அடம்பன் ம.வி, மன்-அல்-அஸ்கர் ம.வி, மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை ஆகிய 03 பாடசாலைகளில் இடம்பெற்று வருகின்றது.

ஆரம்ப நாள் நிகழ்வான இன்று நாடாளுமன்ற உறுப்பினாகளான நாமல் ராஐபக்ஷ, ஜே.ஸ்ரீரங்கா, மனுஷ நாணயக்கார ஆகியோர் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .