2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சியில் போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 26 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட நீதிவான் பி.சிவகுமார் தெரிவித்தார்.

கசிப்பு, கஞ்சா மற்றும் போதை தரும் வேறு சில பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. பொலிஸார் இதனைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், ஏ௯ வீதி வழியாகவே கிளிநொச்சிக்கு இவ்வாறான பொருட்கள் கொண்டுவரப்படுகின்றது என விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி நகரில் வீதி அருகில் இருந்த வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டபோது, வர்த்தக நிலையமொன்றிலிருந்து பெருமளவிலான  கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன், இதனையடுத்து, குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டது என நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--