2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

வன்னியில் பனை மரங்கள் வெட்டப்படுவதாக விசனம்

Super User   / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவம்)

வன்னி பெருநிலப்பரப்பில் எந்த வகையான கட்டுப்பாடுகளும் இன்றி பனை மரங்கள் தறித்து அழிக்கப்பட்டு வருவதாக வன்னி மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிகின்றார்கள்.

கடந்த கால யுத்தம் காரணமாக பல்லாயிரக் கணக்கான மரங்கள் பல்வேறு காரணங்களினாலும் அழிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இருக்கும் மரங்களையும் கட்டுப்பாடுகள் இன்றி வியாபார நோக்குடன் தறித்து  எடுத்துச் செல்வதினால் பனை வளம் அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுபதி ஜீவரத்தினம் இந்த விடயங்கள் சம்பந்தமாக வன்னிக்கு சென்று நேரில் பார்வையிட்டு வந்துள்ளதுடன் இதற்குரிய நடவடிக்கைகளைத் தான் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--