2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

வாகனம் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கலி ஆறு பேர் விடுதலை

Super User   / 2010 நவம்பர் 03 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா மில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம்  வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் ஆறு பேர் இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

ஏனைய மூவரும் நவம்பர் 15ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

கடந்த மாதம்  18ம் திகதி  இரவு இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணையினை மேற்கொண்ட பொலிஸார் கைதானவர்கள் இரண்டு தடவைகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றில் நீதிவான் எம்- பி- முகைதீன் முன்னிலையில் 9 பேரும் ஆஜராகிய போது பொலிசாரின் அறிக்கையின் பிரகாரம் சந்தேக நபர்கள் ஆறு பேரை விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--