Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
A.P.Mathan / 2010 நவம்பர் 04 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
கிளிநொச்சி கல்லாறுப் பகுதியில் கண்ணி வெடி அகற்றிய பின்னரே மீன் பிடிக்க அனுமதிக்க முடியும் என கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று கடற்றொழில் நீரியல் வள அமைச்சு மண்டபத்தில் நடைபெற்ற கடற்றொழில் அபிவிருத்திக்கான விசேட செயலணிக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக பதிலளித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் சுண்டிக்குளத்துக்கு அண்மையாக உள்ள கல்லாறுப் பகுதியில் மீன் பிடிப்பதற்கான அனுமதியைப் பெற்றுத் தரும்படி கல்லாறு மீனவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக நேற்று கடற்றொழில் நீரியல் வள அமைச்சினால் நடத்தப்பட்ட கடற்றொழில் அபிவிருத்திக்கான விசேட செயலணி கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் பரிசீலிக்கப்பட்டது.
இதன்போது, குறிப்பிட்ட பிரதேசத்தின் கடற்படைத் தளபதி, இராணுவத் தளபதிகள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர், அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்தனர்.
கல்லாறுப் பகுதியில் மிதிவெடி அபாயம் இருப்பதால் உடனடியாக மீன்பிடிக்க அனுமதிக்க முடியாதுள்ளதாகவும் கூடிய விரைவில் மிதிவெடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இதன் பின்னரே மீன்பிடிக்க அனுமதிக்கப்படும் எனவும் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கையை கூடிய விரைவில் செயற்படுத்த அறிவுறுத்தப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த மீனவர்கள் ஏற்கனவே சுனாமியினாலும் பின்னர் போரினாலும் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago
21 minute ago
26 minute ago