2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

நானாட்டான் பிரதேசத்தில் விஞ்ஞானத் தொழில்நுட்பக் கண்காட்சி

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 08 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

( இர்ஷாத் றஹ்மத்துல்லா )

உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட விதாதாவள நிலையங்களினால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் விஞ்ஞானத் தொழில்நுட்பக் கண்காட்சி, இம்முறை நானாட்டான் பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.


தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் அனுசரனையுடன் இம்மாதம் 13ஆம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை  நானாட்டான்  மகாவித்தியலாயத்தில் இக்கண்காட்சி நடைபெறவுள்ளதாக  ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.


மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் துறைசார்ந்தவர்களது ஆராய்ச்சி சார்ந்த ஆக்கங்கள், படைப்புக்கள் மற்றும் சிறு கைத்தொழில் உற்பத்திகள்  இக்கண்காட்சியின்போது காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன் விற்பனையும் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--