Suganthini Ratnam / 2010 நவம்பர் 08 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
மன்னார் சிலாவத்துறையில் ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவில் துறைமுகமொன்றை அமைப்பதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
சிலாவத்துறை அரசினால் கலவன் முஸ்லிம் பாடசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற மீள்குடியேற்ற மக்களுக்கான காணிப்பிரச்சிணைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"தற்போது முசலி பிரதேச செயலகப் பிரிவில் 6,242 குடும்பங்களைச் சேர்ந்த 26,500 பேர்கள் மீள்குடியேறியுள்ளனர். குறிப்பாக மன்னார் மாவட்டத்திலிருந்து 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் இன்றும் மீள்குடியேறி வருகின்றனர். இங்கு அவர்களுக்கான காணிப் பிரச்சினைகள் காணப்படுகிறது. குறிப்பாக சிலாவத்துறையினை பொறுத்தவரையில் இங்கு கடற்படை முகாம் அமைந்துள்ளது. இந்த முகாம் அமைந்துள்ள காணிகள், குடியிருப்புக்கள் இருந்த இடமாகும்.
ஆகவே, இங்கு மீளக்குடியேறும் சிலாவத்துறை மக்களுக்கு மாற்று இடங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 560 குடும்பங்களுக்கு அக்காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், சிலர் சில விஷமத்தனமான பிரசாரங்களை தமது அரசியல் இலாபங்களுக்காக செய்து வருகின்றனர். இதற்கு மக்கள் காது கொடுக்காமல் நமது மாவட்டத்தின் ஒற்றுமைக்கும் இன நல்லுறவுக்குமான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்" என்றார்.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான அலிகான் ஷரீப், எஸ்.யஹ்யான், முசலி பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
2 hours ago
4 hours ago
9 hours ago
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
9 hours ago
17 Jan 2026