2020 நவம்பர் 25, புதன்கிழமை

கிளிநொச்சி, முல்லைத்தீவிலுள்ள சில பாடசாலைகளில் மழையால் வகுப்புகளை நடத்த முடியாத நிலை

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 09 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

வன்னிப் பகுதியான கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள சில பாடசாலைகளில் மழையின் காரணமாக வகுப்புகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவதற்கான அனுமதியை வலயப் பணிப்பாளர்களிடம் கோரவுள்ளதாக சம்மந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.  

கோடை காலத்தில் மரங்களின் கீழே வகுப்புகளை நடத்தக்கூடிய சூழல் இருந்த படியால் ஓரளவுக்கு நிலைமையைச் சமாளிக்கக் கூடியதாக இருந்ததாகவும் தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால், மரங்களின் கீழே வகுப்புகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும் அனைத்து மாணவர்களையும்; கூரையுள்ள கட்டிடங்களுக்குள் உள்ளடக்கினால் எந்த வகுப்பையும் நடத்த முடியாத நிலை ஏற்படும். இதனை மாற்றி சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம் என்று ஆலோசித்திருக்கிறோம்.  இதற்கான அனுமதியினை வலயக் கல்விப் பணிப்பாளரிடம் கோரவுள்ளோம் என சம்மந்தப் பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.


கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 60க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் இந்த நிலைமையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .