2020 டிசெம்பர் 03, வியாழக்கிழமை

யானை விரட்டும் நடவடிக்கையில் இராணுவம்

Super User   / 2010 நவம்பர் 09 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஓமந்தை நெச்சிகுளம் பகுதியிலுள்ள கிராமங்களில் திரியும் காட்டு யானைகளை விரட்டும் 3 நாள் நிகழ்ச்சித்திட்டமொன்றை  இராணுவத்தினரும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளும் நேற்று ஆரம்பித்ததாக வவுனியா பிராந்திய வன இலாகா அதிகாரி டபிள்யூ.ஜே.கே. ஹேரத் தெரிவித்தார்.

இத்தகைய திட்டமொன்றில் இராணுவத்தினர் பங்குபற்றுவது இதுவே முதல் தடவை எனவும் புதிதாக குடியேறிய மக்களை காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்கும் நோக்குடன் இச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேற்படி யானைகள் விரட்டப்பட்ட பின்னர் நெடுங்கேணியில் மின்சார வேலியொன்று நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் 563 ஆம் படையணியின்  பிரிகேடியவர் சி.ரணவீர ஆகியோர் இத்திட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--