2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

எவருக்கும் கப்பம் கொடுக்க வேண்டாம்; வவுனியா வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 11 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா வர்த்தகர்கள், எவருக்கும் கப்பம் கொடுக்கத் தேவையில்லை எவரேனும் கப்பம் கேட்டால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு வவுனியா பொலிஸ் நிலையத்தின் தலைமை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

சிவில் நிர்வாகம் நடைபெறுவதினால் அதற்கு பொலிஸாராகிய நாம் அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கவுள்ளோம் எனவும் இன்று வியாழன் காலை வவுனியா பஸ் நிலைய வர்த்தகர்களுடனான சந்திப்பின்போது இவ்வாறு குறிப்பிட்டார்.

குற்றசெயல்களை கட்டுப்படுத்த பொலிஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பொது இடங்களில் சிகரட் புகைத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. அதனை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள்.

வெளியிடங்களிலிருந்து வவுனியா நகருக்கு வருவோர் நள்ளிரவிலும் அச்சமின்றி வீடுகளுக்கு செல்லக்கூடிய நிலை ஏற்படவேண்டும். முச்சக்கரவண்டி சாரதிகள் இரவிலும் சரி பகலிலும் சரி பயண கட்டணத்தில் நியாயமான நடைமுறையினை கடைப்பிடிக்கவேண்டும் என அவர் குறிப்பி;ட்டார்.

அத்துடன் வவுனியா பஸ் நிலையத்தில் குப்பைகள் போடுவதற்கு நகர சபையினால் தகரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதற்குள் அன்றாட கழிவு பொருட்கள் இடப்படவேண்டும்.

இதனை தினமும் அகற்ற நகர சபை நடவடிக்கை மேற்கொள்ளும் வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் சாடிகளில் பூக்கன்றுகளை வைத்து பஸ் நிலைய கட்டிடதொகுதியை அழகுபடுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

நகரத்தின் பாதுகாப்பு விடயத்தில் பொலிஸாராகிய நாம் பொறுப்பாகவே உள்ளோம். வர்த்தகர்கள் தமக்குள்ள இடையூறுகளை எம்முடன் கலந்துரையாடலாம.

அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும் பொலிஸாராகிய நாம் என்றும் மக்களுடைய நண்பர்கள் மக்களுக்கு எந்த வழியிலும் உதவி செய்வதே எமது பிரதான குறிக்கோள் எனவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .