Menaka Mookandi / 2010 டிசெம்பர் 05 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)
இவ்வருடம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மன்னார் மாவட்ட மாணவர்களைக் கௌரவிக்கம் நிகழ்வு மன்னார் வலையக் கல்விப்பனிமனையின் அரம்பக்கல்விப் பிரிவின் ஏற்பாட்டுல் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
இதன் போது சிறப்பு அதிதியாக மன்னார் வலையக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.ஆபேல் ரவல்,பிரதம அதிதியாக வங்காலை புனித அனால் ஆலைய பங்குத்தந்தை எஸ்.ஜெயபாலன் குருஸ் அடிகளார், சிறப்பு விருந்தினராக மன்னார் வலைய முன்பள்ளி உதவிக்கல்விப்பனிப்பாளர் எல்.றொசாறியோ குருஸ் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
தேசிய மட்டத்தில் 190 புள்ளிகளைப் பெற்று 3ஆம் இடத்தைப்பெற்ற மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசியப்பாடசாலை மாணவன் செல்வன் யுட் விதுசன் பிகிராடோ விசேடமாக கௌரவிக்கப்பட்டார். மன்னார் மாவட்டத்தில் 68 பாடசாலைகளில் இருந்தும் சித்தியடைந்த 129 மாணவ மாணவிகள் சான்றுதல் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago