2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

வெள்ளம் காரணமாக ஆண்டிறுதி பரீட்சைகள் நடத்துவதில் சிரமம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

வன்னிப்பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக ஆண்டிறுதிப் பரீட்சையை நடத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக கல்வித்திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெள்ளத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள பாடசாலைகளில் தங்கியிருப்பதாலும் போக்குரத்தைத் தடுக்கும் வகையில் பாதைகளில் வெள்ளம் நிற்பதன் காரணமாக மாணவர் வரவு குறைந்திருப்பதனாலும் ஆண்டிறுதிப் பரீட்சையை நடத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படடுள்ளது.

இதேவேளை மழை தொடருமானால் அடுத்த வாரம் நடைபெறவுள்ள க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கான விசேட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாணர் த.குருகுலராஜா தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .