2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

ஆசிரிய பயிற்சி நெறிகள் மீண்டும் ஆரம்பம்

Kogilavani   / 2010 டிசெம்பர் 06 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

வவுனியா பூந்தோட்டம் தேசிய கல்வியியல் கல்லூரியில் எதிர்வரும் ஆண்டிலிருந்து ஆசிரிய பயிற்சி நெறிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

இக்கல்லூரியில் 06 பயிற்சி நெறிகளுக்காக 140 மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்குரிய தெரிவுகளும் நடைபெற்று  முடிந்துள்ளதெனவும் கல்லூரியின் பீடாதிபதி. கே பேர்னாட் தெரிவித்தார்.

மாணவர்களுக்குரிய இரண்டு விடுதிகளும்,  வகுப்பறைகளும் நீர்விநியோகக் கட்டமைப்புகளும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் முதல் கல்லூரி நலன்புரி நிலையமாக செயல்பட்டதனால் 2009ஆம்,  2010ஆம் ஆண்டுகளில் பயிற்சிக்கு மாணவர்கள் இணைத்து கொள்ளப்படவில்லை எனவும் பீடாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .