2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

ஆனையிறவுக் கடனீரேரி உடைக்கப்பட்டு பெருவெள்ளம் வங்கக்கடலில் சங்கமம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆனையிறவுக் கடனீரேயின் தொடுவாய் இன்று செவ்வாய்க்கிழமை பகல் சுண்டிக்குளம் பகுதியில் அடைமழையின் மத்தியில் உடைக்கப்பட்டுள்ளது. இரணைமடுக் குளத்தின் நீரினால் ஆனையிறவுக் கடனீரேரியின் கிழக்குப் பகுதி நிறைந்திருந்ததனால் கண்டாவளை, முரசுமோட்டை, பரந்தன், தட்டுவன்கொட்டி, ஊரியான், கோரக்கன்கட்டு, புளியம்பொக்கணை ஆகிய பிரதேசங்களில் பெருவெள்ளம் ஏறியிருந்தது.

இதனையடுத்து வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, இந்த நீரேரியின் தொடுவாய்ப் பகுதி அமைந்திருக்கும் சுண்டிக்குளம் பெருங்கடற் பகுதிக்கு விரைந்த இராணுவத்தின் 552ஆவது படையணியின் கல்லாறுப் பகுதி அதிகாரி, கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவுப் பணிப்பாளர் வைரமுத்து, ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன், கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசப் பொதுமுகாமையாளர் கணேசபிள்ளை மற்றும் கடற்றொழிலாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்தத் தொடுவாயை உடைத்து நீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 200 மீற்றர் அகலத்தில் இந்தத் தொடுவாய் வழியாகப் பேரிரைச்சலோடு பாய்ந்து கொண்டிருக்கும் நீர் - வங்கக்கடலில் கலக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--