2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையினால் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 2610 குடும்பங்களை சேர்ந்த 11,173 பேர் வரை பாதிப்படைந்துள்ளதாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.


மன்னார் பள்ளிமுனை 50 வீட்டுத்திட்டம், சாந்திபுரம் பணங்கட்டுக்கோட்டு, ஜீவநகர், ஜிம்றோன் நகர், பாவிலுப்பட்டான் குடியிருப்பு, கீலியன் குடியிருப்பு, (தலைமன்னார் ஸ்ரேஸன், பியர் கிராமம்) பேசாலை நூறுவீட்டுத்திட்டம், உப்புக்குளம் வடக்கு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அதிகளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


இவர்களுக்கு சமைத்த உணவுகள் மூன்று தினங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, இடம்பெயர்ந்த நிலையில் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கு ஒரு வாரத்திற்காண உலர் உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரான்லி டி மேல் குறிப்பிட்டார்.
தேங்கி நிற்கும் மழை நீரை கடலுக்கு அனுப்பும் வேலைத்திட்டங்களும் இடம்பெற்று வருவதாகவும் இதற்கு மன்னார் மாவட்ட அனர்த்த சேவைகள் பிரிவு உதவி செய்து வருவதாகவும் மன்னார் பிரதேசச்செயலாளர் திருமதி ஸ்ரான்லி டி மேல் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--