2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

கரைச்சி, பச்சிலைப்பள்ளியில் மீள்குடியேறிய மக்களுக்கு நிதியுதவி வழங்கும் வைபவம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.சுகந்தினி)

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள  மக்களின் வீட்டு புனர்நிர்மாணப் பணிகளுக்காக இறுதிக்கட்ட நிதியுதவி எதிர்வரும் 24ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

500 குடும்பங்களுக்கு இறுதிக்கட்டமாக 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி  பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள  மக்களின்  வீட்டு புனர்நிர்மாணப் பணிகளுக்காக ஏற்கனவே 50,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிதியுதவி வழங்கும் நிகழ்வில் புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரஸ்ரீ கஜதீர, மனிதவள அமைச்சர் டி.யூ.குணசேகர ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--