2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

மாந்தை மேற்கு பிரதேச மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்

Super User   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும்  விசேட கூட்டம்  நேற்று  மாலை அடம்பன் மகா வித்தியாலயத்தில் இரானுவத்தின் 542ஆ வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

இதன் போது இராணுவத்தின் 542ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி லியனகே, சிவில் பாதுகாப்பு பிரிவு அதிகாரி நலிந்த விதாரனே, அரச அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம சேவையாளர்கள், பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேற்படி கலந்துரையாடலின்போது மக்கள் தமது கிராமங்களில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--