2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

செட்டிக்குளத்தில் கிளைமோர் வெடிப்பொருட்கள், தற்கொலை அங்கி பொலிஸாரினால் மீட்பு

Kogilavani   / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

செட்டிக்குளம் பகுதியில் நேற்றுமாலை 23 கிலோ நிறையுடைய கிளைமோர் வெடி பொருட்களும்,  ஐந்து கிலோ வெடிமருந்து பொருத்தப்பட்ட தற்கொலை அங்கியுமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாவற்குளம் காட்டுபுறத்தில்,  நிலத்தின் கீழ் புதைத்து வைத்திருந்த நிலையில் இவ்வெடிப்பொருட்கள் தோன்றியெடுக்கப்பட்டன.

மேற்படி வெடிபொருட்கள்  மோட்டார் சைக்கிள் எரிபொருட்கள் தாங்கி ஒன்றினுள் மிகவும் பாதுகாப்பான முறையில் பொலித்தீன் உறைகளினால் சுற்றப்பட்ட நிலையில் புதைத்துவைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .