A.P.Mathan / 2011 ஜனவரி 08 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
தமிழ் மக்களுக்கு நேர்ந்த துன்பங்களை முதன் முதலில் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மன்னாரில் இன்று இடம்பெற்ற நல்லிணக்க ஆணைக்குழுவில் சாட்சியமளித்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்தார். இவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்...
இந்த நாட்டின் தமிழ் மக்கள் பட்ட துன்பங்கள், அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு எதிராக செய்யப்பட்ட காரியங்கள் ஆகியவற்றை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக மக்கள் காணாமல்போன விடயம், சட்டத்திற்கு மாறாக மக்கள் கொல்லப்பட்ட விடையங்கள், சட்டத்திற்கு முன்னால் மக்கள் குற்றவாளிகள் என அறியப்பட்டவர்கள், வேறுவிதமாக பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட விடயங்கள், தமிழ் மக்களை கொண்டுபோய் சித்திர வதை செய்தவை, மக்கள் வாழும் இடங்களில் குண்டுகளைப்போட்டு கொன்றமை, கட்டிடங்கள், மருத்துவமனை போன்றவற்றை அழித்தொழித்த உண்மைகளை சம்பந்தப்பட்டவர்கள் கண்டு சொல்ல வேண்டும் என மன்னார் ஆயர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.
உண்மைகளை மறைப்பதினால் எவ்விதமான பயனும் இல்லை. உண்மைகளை எடுத்து அவை மக்கள் முன்னால் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். யார் இதை செய்தார்கள் என்ற உண்மை வெளிப்படுத்தப்படும்போதே மக்கள் மத்தியில் உண்மையான ஒப்புரவு ஏற்படுவதோடு சமரசம் செய்ய முடியும். இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் உண்மையாக எல்லா மக்களோடும் சேர்ந்து வழா வேண்டும். இதற்காக உண்மையான அரசியலமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026