2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

'த.தே.கூட்டமைப்பிலிருந்து வவுனியா நகரசபைத் தலைவர் நாதன் விலக்கப்படுவார்'

Super User   / 2011 ஜனவரி 08 , பி.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 


(ரி-விவேகராசா)

தமிழரசு கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்ட வவுனியா நகர சபைத் தலைவர் ஜி நாதன், கட்சியிலிருந்து முற்றாக நீக்கப்படுவார் எனவும் இதற்கான அறிவித்தல் விரைவில் உத்தியோகபூர்வமாக அவருக்கு தெரிவிக்கப்படும் எனவும் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்றுசனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பொதுமக்களுடைய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இதனை தெரிவித்தார்.

இந்த விடயம் ஒரு நாளில் செய்யக்கூடிய காரியம் அல்ல மிகவும் நிதானமாக கையாளவேண்டும் வவுனியா நகர சபைத் தலைவரை கட்சியிலிருந்து நீக்குவதென எமது செயற்குழு தீர்மானித்துவிட்டது எனவும் அவர்  மேலும் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X