2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

ஜனநாயகத்தை நிலை நாட்ட வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளோம்: மாவை சேனாதிராசா

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 09 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

ஜனநாயகத்தை நிலை நாட்டவே நாம் வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்த இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் யாழ.; மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா மக்கள் மத்தியில் செல்வாக்கும் நிர்வாக திறமையும் ஆற்றலும் கொண்டவர்களை இந்த தேர்தலில் வேட்பாளராக நிறுத்தவுள்ளதாகவும் கூறினார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற வவுனியா மாவட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாங்கள் தோல்வி கண்ட சமூகம் அல்ல.  எங்களுக்கு பின்னால் மக்கள் உள்ளனர்.  தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளை மக்கள் ஆதரிக்கின்றனர் என்பதை தென்னிலங்கை சமூகத்திற்கும் சர்வதேசத்திற்கும் இந்த தேர்தல் முடிவுகள் எடுத்து சொல்லப் போகின்றன. நாங்கள் இப்போது சில தந்திரோபாயங்களையும் அணுகுமுறைகளையும் கடைப்பிடிக்கின்றோம்
எமக்குள்ள பலம் காரணமாகவே இப்போது அரசு எம்மை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன்,   செல்வம் அடைக்கலநாதன் வவுனியா நகரசபை உறுப்பினர்கள்  எம்.எம்.ரதன், எஸ்.சிவகுமார், எஸ்.சுரேந்திரன் மற்றும் கிராமமட்ட தலைவர்கள் பலரும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--