2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மன்னாரில் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2011 ஜனவரி 13 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்டத்தில்  வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தொழில் இயக்கம் எனும் அமைப்பு யு.எஸ்.எ.ஐ.டி அமைப்பின் நிதி உதவியுடன் 16 வயது முதல் 40 வயதிற்குட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று வருகின்றனர்.

இவ்விடையம் தொடர்பான நடமாடும் சேவை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இன்றும் நாளையும் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.

வேலையற்றவர்கள் நடமாடும் சேவைக்குச் சென்று அங்கு வழங்கப்படும் விண்ணப்பப்படிவங்களை பதிவு செய்து கொடுத்தல் வேண்டும். மேற்படி விண்ணப்பங்கள் தொழில் அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டு பின் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நடமாடும் சேவையின் போது ஆயிரக்கணக்கானவர்கள் தங்களின் விண்ணப்பங்களினை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .