2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

நிர்வாக திறமையுடையவர்களை வேட்பாளராக நியமிக்கவுள்ளோம்: வினோநோகராதலிங்கம் எம்.பி.

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 16 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

மன்னார் நகரசபைத் தேர்தல் மற்றும் நான்கு பிரதேசபைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு தாம் எதிர்பார்த்தமைக்கு மேலாக பலரது விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்த கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், தகுதியான நிர்வாகத் திறமை கொண்டவர்களை வேட்பாளராக நியமிக்கவுள்ளதாகவும் கூறினார்.

மன்னாரிலுள்ள நான்கு பிரதேசபைகளுக்கும் நாம் வேட்பாளர்களை நாம் தெரிவு செய்யவுள்ளோம்.  அதற்காக எமது வேட்பாளர் தெரிவுக்குழு  மன்னாரின் பல இடங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.  

நீண்டகால இடைவெளிக்கு பின்னர் மன்னார் நகரசபைக்கும், மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு பிரதேசபைகளுக்கும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.  ஏனைய கட்சிகளும் மன்னாரில் சகல சபைகளுக்கும் வேட்பாளர்களை தேடுவதில் தீவிரம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X