2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

வவுனியா, மன்னார், முல்லை மாவட்ட செயலகங்களில் விசேட பாதுகாப்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 20 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

உள்ளூராட்சிமன்ற தேர்தலை முன்னிட்டு வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட செயலகங்களில் இன்று வியாழன் முதல் விசேட பாதுகாப்பு நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வன்னி பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்தது.

இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை இந்த பாதுகாப்பு நடைமுறை அமுலில் இருக்கும் என குறிப்பிட்ட அவ்வலுவலகம், மாவட்ட செயலகத்திற்கு செல்லும் வீதிகளிலும் பொலிஸார் கண்காணிப்பு சேவையின் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்ய வரும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மற்றும் சுயேற்சைக் குழுக்கள் சிரமமின்றி செயலகங்களுக்குள் நுழைய சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என வன்னி மாவட்ட உள்ளூராட்சிமன்ற சபை தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி ஏ.எஸ்.கருணாநிதி கூறினார்.

வவுனியா, மன்னார் முல்லைத்தீவு ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா நான்கு பிரதேச சபைகளுக்கும்,  மன்னார் நகர சபைக்கும் தேர்தலுக்குரிய நியமனப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--