Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஜனவரி 20 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் யானை தாக்கி மரணமாக சம்பவமொன்று துணுக்காய் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டமான துணுக்காய் பிரதேசத்தில் உயிலங்குளம், வேட்டையடைப்பு, தென்னியன்குளம், ஆகிய பகுதிகளில் காட்டுயானைகளுடைய அட்டகாசம் அதிகரித்து காணப்படுகின்றது.
யானை கூட்டம் மக்கள் வசிப்பிடங்களுக்குள் புகுந்து பயிர்களையும் சிறுதானியங்களையும் அழிந்துவருகின்றன என பிரதேச வாசிகள் குறிப்பிடுகின்றனர்.பயிர்களுக்கு அழிவும் தமது உயிர்களுக்கு ஆபத்தும் ஏற்பட்டுள்ளது என குறிப்பிடும் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் பயத்துடன் தாம் வாழ்க்கை நடத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.
யானைக்கூட்டங்களை வனப்பிரதேசத்திற்குள் விரட்டும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
41 minute ago