2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவில் ஸ்ரீரங்காவின் கட்சிக்கு ஐ.ம.சு.கூட்டமைப்பு ஆதரவு

Super User   / 2011 ஜனவரி 24 , பி.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முல்லைத்தீவிலுள்ள 4 உள்ளுராட்சி சபைகளுக்கு போட்டியிடமாட்டாது. எனினும் கூட்டமைப்பின் பங்காளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவின் பிரஜைகள் முன்னணிக்கு ஆதரவு வழங்கும் என அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு நகர சபை, புதுக்குடியிருப்பு பிரேதச சபை, மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை ஆகியவற்றிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு போட்டியிடமாட்டாது.

இச்சபைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவுடன் பிரஜைகள் முன்னணி பஸ் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்தார்.

'ஏற்கனவே எங்களின் வேண்டுகோளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை எதிர்த்து நாங்கள் முல்லைதீவில் போட்டியிடுவோம் என அவர் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளராகவிருந்து அரசியலுக்குள் நுழைந்த ஜே.ஸ்ரீரங்கா, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு தெரிவானார்.  

எனினும் 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் போது அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்து அரசாங்கத் தரப்புக்கு மாறினார்.
 


  Comments - 0

 • manidan Tuesday, 25 January 2011 10:24 AM

  ரங்கா ஓர் பச்சோந்தி

  Reply : 0       0

  vatsan Tuesday, 25 January 2011 11:03 AM

  அரசியலில் இது எல்லாம் சகஜம் அப்பா. இவர் அடுத்த ஜனாதிபதி ஆனாலும் வியப்பில்லை. முன்பு கட்சி தாவும் அரசியலை விமர்சித்தவர் இவரை கேள்வி கேட்க ஒரு மின்னல் நிகழ்ச்சி தேவை. ஆனால் முல்லைத்தீவு ஒன்றும் நுவரெலியா போல அவ்வளவு இலகுவில் ஏமாற மாட்டார்கள் என நினைக்கிறேன்

  Reply : 0       0

  manidan Tuesday, 25 January 2011 05:52 PM

  வட்சன் கூறியது சரி அவரை கேள்வி கேட்க இன்னுமொரு மின்னல் நிகழ்ச்சி தேவை.... முதல்வன் படம் அர்ஜுன் போல் இருப்பர் என்று பார்த்தல் ரகுவரனுக்கே சேவை செய்யும் தொழிலாகி ஆகிவிட்டார் நம்முடைய ரங்கா ஐயா.

  Reply : 0       0

  Ashraff Wednesday, 26 January 2011 12:20 AM

  கல்முனையிலிருந்து முஸ்லிம் பிரதிநிதிகளையும் இந்த முன்னணியில் போட்டியிட வைத்தால் நல்லது. மற்றும் உங்களது தேசிய ஒருமைப்பாட்டு இ மற்றும் அபிவிருத்தி சேவைக்கும் அயராது மக்களின் துன்பங்களில் பங்கெடுக்கின்றமைக்கு மிக்க நன்றி.

  Reply : 0       0

  Ramasamy Ramesh Wednesday, 26 January 2011 04:16 PM

  நான் ஊடகத்துறையில் ரங்காவைத் தான் ரோல் மொடலாக நினைத்து எனது நண்பர்களுடன் வாதாடுவேன். ஆனால் இப்போதுதானே புரிந்தது ரங்கா எதற்கு பொருத்தமான ரோல் மோடல் என்று.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--