2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

தமிழரசு கட்சியின் இளைஞர் அணி தலைவர் புலனாய்வு பிரிவினரால் கைதாகி விடுதலை

Menaka Mookandi   / 2011 ஜனவரி 25 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மன்னார் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளரும், இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித் தலைவருமான வி.ஸ்.சிவகரன் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார், மூர்வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

எனினும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் அவரிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படாமல் இருந்த போது மன்னாரில் உள்ள பிரபல சட்டத்தரனி ஒருவரின் கோரிக்கைக்கு அமைவாக இன்று காலை 11 மணியளவில் சிவகரன் விடுதலை செய்யப்பட்டார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பாக மும்முரமாக செயற்பட்டு வந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .