Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி-விவேகராசா)
இலங்கை சாரணர் சங்க நூற்றாண்டை முன்னிட்டு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பருத்தித்துறையிலிருந்து தெற்கு நோக்கி ஆரம்பித்த தேசிய சாரணர் சைக்கிள் சுற்றுலா இன்று செவ்வாய்க்கிழமை மாலை வவுனியா வந்தடைந்தபோது அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வடமாகாணத்தின் சகல கல்வி வலயங்களிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுடன் தென்பகுதியிலிருந்து வந்த மாணவர்களுமாக சுமார் நூறு இந்த சைக்கிள் சுற்றுலாவில் பங்குகொள்கின்றனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
வவுனியா வந்தடைந்த சாரணர்களுக்கு வவுனியா சாரணர்கள் பாண்ட் வாத்தியம் சகிதம் தமிழ் மத்திய மகாவித்தியாலயம் வரை அழைத்து செல்லப்பட்டனர்.
எதிர்வரும் 22ஆம் திகதி இந்த சுற்றுலா காலியில் முடிவடையும். வடமாகாண கல்வி செயலாளர் இ.இளங்கோவன் நேற்று இந்த நிகழ்வை ஆரம்பித்துவைத்தமை குறிப்பிடதக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
54 minute ago
58 minute ago