2025 ஜூலை 12, சனிக்கிழமை

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மன்னார் மக்களுக்கு நட்டஈடு

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மக்களுக்கான நட்டயீட்டுக் கொடுப்பனவுகள்  அமைச்சர்களான சந்திரசிறி கஜதீர மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டன.
 
வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராக இருந்த காலத்தில் அந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், எம்.பி.பாருக் ஆகியோரும் இதன் போது சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .