2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

தெற்காசியாவின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வவுனியா விஜயம்

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

தெற்காசியாவிற்கான ஜரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழுபேர் அடங்கிய குழுவினர் இன்று புதன்கிழமை வவுனியாவிற்கு விஜயம் செய்தனர். இந்நிலையில் அரச அதிபரை சந்தித்த அவர்கள், மாவட்ட நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

அத்துடன், இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம், தடுப்பு நிலையங்களில் இருந்த போராளிகளுடைய புனர்வாழ்வு மற்றும் அண்மையில் பெய்த பெருமழையினால் வவுனியாவில் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் குறித்த குழுவினருக்கு அரசாங்க அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டது.

பின்னர் மாவட்ட அரசினர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் இயங்கிவரும் சத்திரசிகி;ச்சை கூடத்தையும் பார்வையிட்டனர்.

அத்துடன் வன்னியில் நடைபெற்ற மனிதாபிமான நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்து வந்தவர்களில் இன்னமும் சொந்த இடங்களுக்கு திரும்பமுடியாது  செட்டிகுளம் கதிர்காமர் நிவாரண கிராமத்தில் தங்கியுள்ள மக்களையும் இதன்போது இவர்கள் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--