Menaka Mookandi / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியின் துள்ளுக்குடியிருப்பு கிராமப்பகுதியில் வீதியோரமாக நடந்துசென்றுகொண்டிருந்த பாதசாரியான வாயோதிப பெண்ணொருவர் மீது கூழர் ரக வாகனம் மோதியதில் குறித்த வயோதிப பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் துள்ளுக்குடியிருப்பு கிராமத்தினைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் அக்னேஸ் (வயது 73) எனும் வயோதிப பெண் என தலைமன்னார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதை அடுத்து அவ்விடத்தில் திரண்ட மக்கள் குறித்த வாகன சாரதியினை கடுமையாகத் தாக்கியதோடு வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர்.
பின் சம்பவ இடத்திற்கு வந்த தலைமன்னார் பொலிஸார் வாகன சாரதியினை கைது செய்ததோடு சடலத்தினை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். மேலதிக விசாரனைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago