2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் கூட்டுறவு மத்திய நிலையம் திறப்பு

Super User   / 2011 ஜூன் 11 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.விவேகராசா)

வடமாகாணத்தில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் தேவைப்படும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை மொத்தமாக வவுனியாவில் கொள்முதல் செய்ய கூட்டுறவு மத்திய நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

வவுனியா புகையிரத  நிலைய வீதியில் அரச உணவுக்களஞ்சியம் நிலையத்தில் அமைந்துள்ள இந்த நிலையத்தின வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி- ஏ -சந்திரசிறி வைபவரீதியாக இன்று காலை திறந்துவைத்தார்.

'யாழ்;ப்பாணம், முல்லைத்தீவு கிளிநொச்சி, மன்ன்hர் வவுனியா மாவட்டத்தில் 47 கூட்டுறவுச்சங்க கிளைகள் உள்ளது இவை அனைத்து மேற்படி நிலையத்தில் மொத்த விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் கூட்டுறவு அமைச்சினால் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது  பொருட்களை கொள்முதல் செய்ய கூட்டுறவு அமைச்சு வடமாகாண கூட்டுறவுத்திணைக்களகத்திற்கு 40 மில்லியன் ரூபாயினை கடன் இன்றி வழங்கியுள்ளது' என கூட்டுறவு ஆணையாளர் திருமதி மதுமதி தெரிவித்தார்.

இதுவரைகாலமும் கூட்டுறவுச்சங்கங்கள் அத்தியாவசிய பொருட்களை தனியார் வர்த்தக நிலையங்களிலும் கொழும்பிலும் கொள்முதல் செய்து வந்தனர் புதிய திட்டத்தின் கீழ் பலவகையான நன்மைகள் ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X