2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் கண் சிகிச்சை முகாம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 14 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.விவேகராசா, ஹேமந்த்)

கிளிநொச்சி மாவட்டத்தில் விழி வெண்பிறை நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான சத்திர சிகிச்சை இன்று கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் ஆரம்பமாகியுள்ளது.

வடமாகாண ஆளுநரின் ஏற்பாட்டில், கொழும்பிலிருந்து விசேடமாக வருகைதந்த மருத்துவக் குழுவினர் இந்தச் சத்திர சிகிச்சையைச் செய்கின்றனர்.

இதன் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை அத்தியட்சகர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சத்திர சிகிச்சை நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

இந்தக் கண் சத்திர சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பளை, இயக்கச்சி, பூநகரி, தருமபுரம், முழங்காவில், அக்கராயன், வேரவில், வன்னேரி, வட்டக்கச்சி, இரமநாதபுரம் ஆகிய இடங்களில் இருந்து 250 வரையான நோயாளிகள் வந்திருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .