Suganthini Ratnam / 2011 ஜூன் 22 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரி.விவேகராசா)
வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர், புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனை வவுனியாவில் இன்று புதன்கிழமை காலை சந்தித்து கலந்துரையாடினார்.
வவுனியா வைரவபுளியங்குளத்திலுள்ள அலுவலகத்தில் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலவரங்கள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.
இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனையும் பிரிட்டிஷ் உயரஸ்தானிகர் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது பலதரப்பட்ட அரசியல் விடயங்கள் குறித்து அவர் கேட்டறிந்து கொண்டார். புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து விடுதலையான போராளிகளின் தொழில், அவர்களுடைய வாழ்வாதாரங்கள் மற்றும் மீள்குடியேற்றப்பட்ட மக்களுடைய நிலவரங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் அவர் விபரமாக கேட்டறிந்தார்.
வடபகுதியின் நிலவரங்களை நேரில் அவதானிக்கும் பொருட்டு இவரது விஜயம் அமைந்துள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்தனர்.
35 minute ago
47 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
47 minute ago
52 minute ago
1 hours ago